எழுகின்ற வேலையில் விடியல் தந்த குளிரில்
போர்வைக்குள் காதலாகிறேன்

மழை பெய்த நேரத்தில் முழுதாய் நனைந்திருந்த
சாலையில் காதலாகிறேன்

தூரத்து மேகத்தை அழைக்கின்ற காற்றுடனே
மெல்லிய மண் வாசனையில் காதலாகிறேன்

யாரென்று தெரியாமல் எனைப் பார்த்து சிரிக்கும்
அக்குழந்தையால் காதலாகிறேன்

உச்சி மலை அழகினில் வெண்மை விழும் அருவியில்
சில்லென்ற காற்றில் காதலாகிறேன்

சாலையோர நடையில் திடீரென சந்திக்கும்
நினைவு முகங்களில் காதலாகிறேன்

தனிமை நேரங்களில் முதல் அந்த முதல்
தருணங்களை எண்ணுகையில் காதலாகிறேன்

உடுக்கின்ற ஆடையில் சேரும்
மிடுக்கினில் காதலாகிறேன்

அவன் என்னும் சொல்லில் காதலாகிறேன்
அவன் மார்பினில் தவழ்கையில் காவிய காதலாகிறேன்

இன்பந்தரு சுவை தமிழ் சொற்களை எழுதுகையில் காதலாகிறேன்
அவை சுவைபட வாசிப்பதிலும் காதலாகிறேன்

அக இன்பம் தரும் யாவும் காதல் என்பதாகும்
அன்பும் பாசமும் புரிந்துணர்வாய் செய்வது காதலாகும்

ஆதலால் காதலாகிறேன்

அவனுக்கும் அவளுக்கும் என்றில்லாமல்
அன்பு தவழும் யாவரிடத்திலும் இருப்பதால்

நான் என்றும் காதலாகிறேன்!!!

— காவியங்கள் படைப்போம்

53