மாய வாழ்வு
ஏதும் எனதன்று… எல்லாம் மாயை…!
கூடும் எனதன்று….கூத்தாண் செயல்…
பாடும் புகழ் கொண்டு அறிவார் – கீர்த்தியை…
பண்போடு வாழ்ந்தார், ஆடும் நாளில் ஆசைக்கினங்க
ஆற்றும் காமம். அடங்கும் நட்களில் செய்த தாமம்
தவிர்த்து – வருத்தும் ! ஆண்டானும் அடியேனும்.
ஆறடி நிலத்திலே – பொருந்தும்……
— சிவராஜ் மணிவண்ணன்
வேலூர்
நண்பன்
இருவர் கொண்ட கொள்கைகள் வேறு,
அதனால் எடுத்த முடிவுகள் வேறு,
அதில் செய்த செயல்கள் வேறு,
பெற்ற அனுபவங்கள் வேறு,
அதனடியாய் பிறந்த பாதைகள் வேறு,
பின் தொடர்ந்த பயணங்கள் வேறு, காலங்கள் கடந்த பின்பும்,
பழைய நினைவுகள் கண் சிமிட்டுகிறது,
தேன் திருடும் வண்டும், கனி தரும் தருவும்,
துளி தரும் மேகமும், ஆசையாய் காத்திருந்தன,
பிரிந்து போன தண்டவாளங்கள் கூடும் நாள் வராதோ என்று!!!
– விக்னேஷ்
சென்னை
5
உங்கள் கருத்தினை பதிவிடுக