மழை ஒரு கானல் நீர்
மேகங்களின் ஊடல்கள்
மிருத்தியம் செய்த பாக்கியம்!
கார்நங்கை கலாபம்
பூட்டிய காலம்!
வேளாண்மை
வன்மம் கொண்ட காலம்!
புதுநெல் வறுநகை
பூத்த காலம்!
கமஞ்சுல் எட்டிப்பார்த்த
நிலமெல்லாம்
மான்மியம்!
இடியென்ற சலங்கையோடு
வருகை தந்து; மின்னல் மிடுக்கோடு
நடனமாடி; கார்மேகம் கட்டிய சீலையும்
காற்றோடு கதை பேசும்
லாவண்யம் காண்பாய்!
பொழுதுசாயும் நேரம்;
போர்வை போர்த்திய மேகம்
கண் சாடை காட்டுகிறாள்,
உயிர் நீர் கொடுக்க!
குழைந்த சேற்றில்
விதைத்த விதை
வறண்ட நிலமாய்
வாடிபோயின!
வயல்வெளி கொஞ்சும் கிளிகளும்
நகர நாற்காலியில்
இசை தெரியாமல் சிதறிப்போயின!
வலைப்பின்னல்
வாழ்க்கையாயின எல்லாம்
நிழல் தேடி அலைகிறோம்.
மரம் எங்கே என்று!
விழிக்குள் வலியை வைத்து
வழியே வானமாய்,
வருங்காலம் வாழ
இரக்கம் காட்டுவாளா.
அந்த மழைக்கன்னி??.
மரமே மழைக்கு வழி!
மழையே மனிதனுக்கு உயிர்!
– கவிதாயினி அணில்
(அனிதா)
தஞ்சாவூர்
33
உங்கள் கருத்தினை பதிவிடுக