கனாக்கள் பல கண்டு… கவிதைகள் பல கருதி…
காகித பூக்கள் சுமந்த காரிகை இவள்.

கதைகள் பல கேட்டு… காரணம் பல விணவி… காரிருளில் வாழும் கன்னி(இம)யம் இவள்.

தன்னாசை யாவும் தகர்ந்த போதும் தளராமல் தன்னலமற்று தலைநிமிர்ந்தாள்..

நிமிர்ந்த தலை கனக்கவில்லை… கனமோன்றில் கானாமல் போகிறாள்…

யார் யாரோ வந்தனர்… சென்றனர்… நீ மட்டும் சொல்லாமல் சென்றதேனோ…

பெண் சுதந்திரம் பேசுவோர் மறைந்திடுக..
ஆண் கண்ணியமும் வரைமுறையும் வகுத்திடுக…

நம்பினார் கைவிடப்படார்…

இந்த சமூகம் செயலற்றது என்றவரும் வென்றார்…
இதுவும் கடந்துபோகும் என்றவரும் வென்றார்…
இது நம் சமூகம்… இழந்தவையில் எனதும் ஒன்றென எண்ணியவர் தோற்றார்.

மாற்றம் தேவை… அது ஏமாற்றம் என்றாகாமல் – சுயத்தின் மாற்றம் என்றாகட்டும்…!

1