இருபோர் முகிலின்
முத்தத்தில் கசிந்த
மழைத்துளி ஒன்று
தன்னில் ஒரு கருவை ஏந்தி
மண்ணில் பிறசவிக்க
புவியீர்ப்பு விசை ரயிலில்
பயணிக்கிறது
காற்றில் அகப்பட்ட காகிதங்கள் தோறும்
அந்த மழையின் கரு
தன் கனவுகளை தீட்டி
மகிழ்கிறது
ஒரு வற்றாத நதியையும்
பசுமை நிறை பாதையையும்
பரிதி தின்னும் கடலையும்
தன் கற்பனையில்
அழித்து அழித்து வரைகிறது
எங்கிருந்தோ வந்த பூவின் வாசம்
அந்த மழைக் கருவின் கவிதைக்கு
கவரி வீசி செல்ல
அந்த கருவின் இதயம்
காற்றிலிருந்தே காற்றிலாடியது
பாவுலகில் இதுவரை எவராலும்
பாடவே முடியாத
பாவுலகின் லயத்தில்
லயித்திருக்கும் அந்த
கருவிடம் எப்படி
யார் போய் சொல்வது
வற்றிய நதித்தடத்தில் விழுந்து – தானும்
வற்றிவிட்ட செய்தியினை
கற்பனை கள்ளின் போதையில்
மரணவலி தெரியுவா போகிறது…
-நரேன் குமார்.
1
உங்கள் கருத்தினை பதிவிடுக