அழகு சொல் பெயர்த்தெடுத்து அங்கம் செய்தான்

கவிதரு இன்னோசை அதனுட் புகுத்தினான்

மோகன யுகஞ்செய் தானுடனனுப்பினான்

மென்னுடற் மண்பட்டு விளைந்த நயத்துடன் இலக்கணம் படைத்தான்

ஆதிப்பெற்று அந்தமற்ற புகழ் கொடுத்தான்

ஓசை தந்த உவமை கொண்டு உருவஞ் செய்தான்

தெற்கு கண்ட மேவதிலே குடிபெயர்ந்தான்

கடற்சேர் புண்ணாற்றுடன் நாகரீக தனை கொடுத்தான்

இன்னாகி இன்புறும் காவியம் சமைத்தான்

அரும்பிடும் சொல்கேள் ஆனந்தம் கொண்டான்

இயல் இசை நாடகம் இவை வகுத்தான்

ஐம்புலனிற் பேரமைதி எய்யச் செய்தான்

அமுதினிற் மேற்சுவை அதற்களித்தான்

பருகிடுவோர் மனங்களிற் துயில் கொண்டான்

தண்பெரும் மதியிற் காட்டினும் மிகு தந்தான்

எட்டிடும் தொலைவினிற் ஓர் உயர்வு தந்தான்

சொல்லினுள் இன்பம் வைத்தான் – அவை

சொல்லிட கேட்டிட சுவை மேலும் பெருக செய்தான்

செங்கதிரோன் பரவிய திசையாங்கும் அடைந்தான்

வாழிய நின்பேர் எனப் போற்றுதும் செய்தான்

 

படைத்தான் இவன்

மொழி என்றான் – அது

நம்முள் அங்கமென்றான்

தமிழென பெயரளித்தான் – அது

நம் உயிரென உணரச் செய்தான்

படைத்தான் இவன்.

94