பங்குனி உத்திரமாம்!
பட்டு மேனியனாம்
பழனி ஆண்டவனாம்
முருகனின் விழாவாம்!
தேரிலே ஊர்வலமாம்
பக்தர்கள் கூட்டமாம்
மாலைகள் போட்டனவாம்
தீர்த்தங்கள் எடுத்தனவாம்
மாடுகள் பூட்டினவாம்
பழனிக்கு பயணமாம்
நலிந்த உடலாம்
ஓடும் வேகமாம்
பாத யாத்திரையாம்!
வாருதய்யா மக்ககூட்டமாம்
முருகனைக் காணவாம்
மலையில் மணியாம்
அரோகரா கோஷமாம்
கணீரென ஒலிக்குமாம்
மயில்கள் எல்லாம்
மலைக்கு பறந்துவருமாம்
கோவிலில் கொடியேற்றமாம்
இடியே மத்தளமாம்
மின்னலே ஒளியாம்
காற்று கவிபாடுமாம்
மரக்கிளை நடனமாடுமாம்
மயில் தோகைவிரிக்குமாம்
முருகனை வரவேற்குமாம்
மலையில் செந்தூரமாம்
எங்கும் காவிவண்ணமாம்
இதனைக் காணவாம்
முருகன் பவனியாம்
மயிலிலே ஏறியாம்
மலையைச் சுற்றியாம்!
மலை அழகோஅழகாம்
இரவில் மலையாம்
நட்சத்திர கூட்டமாம்!
தங்க நிலவு ஒளிர்ந்ததாம்
அதுதான் கோபுரமாம்
கருவறையில் முருகனாம்
முருகனின் முகமாம்
இராஜ அலங்காரமாம்
காண விழித்ததாம்
கோடி கண்களாம்
இரவுபகல் பாராமலாம்..
– மு அருண்குமார்
ஈரோடு
0
உங்கள் கருத்தினை பதிவிடுக