தெருவுக்கேதேவதையவள்

பூசுமக்கும்பூவையவள்

மல்லி , ஜாதி, முல்லைஎனகூவிவரும்

அவளுக்குசெவிமடுப்பார்   

யாருமில்லைஎங்கள்தெருவிலே

தேடிவரும்தென்றலுக்கு 

மலர்வாசனைபரிசளிப்பாள்.

முழத்தால்அளவெடுத்துமலர்சரத்தை

கரத்தால்வழங்கிடுவாள்

இதழ்விரித்தகமலம்போல்

புன்னகைபூத்திடுவாள்

பூவாசம்  சுவாசிப்பதால்அவள்

வியர்வைகூடபூவாசம்

வண்ணவண்ணரோசாவும்

சாமிக்குஅரளியும்சுமந்துவர

மறப்பதில்லை 

பூவும்நாரும்போல்

அவளும்பூவுமாய் 

நகருதுஅவள்வாழ்க்கை


— Heni Jaya Seelan
Chennai

தமிழ் வேழத்தின் பள்ளியெழுச்சி!

நெறியின் றிவளைந்து ஓடி கழுகு
அறியாது தப்பிப் பிழைக்கும்பாம் பல்லநீ
நேர்வரிசை யில்நகர்ந்து செல்லும் எறும்பினது
நேர்மையுடை யோர்தமிழி னத்தோர் – வருங்காலம் 
உன்றன்செய் யுள்கூறட் டும்கற் றதுதமிழ்
தன்குடலேற் காயுணவாய் மற்ற துஉமிழ்
பொழிலில் முளைத்த கருவேலம் போல
அழிக்கின்ற தேநம்மி லக்கியத்தை வேற்று
மொழிக ளதன்வே ரையறுக்கும் வேழம்
விழித்திறக்கும் நாள்தூர மன்று!

— தமிழொளி
காஞ்சிபுரம்

புத்தகம்

புரட்டுகின்ற போது நான்
தீர அறிகிறேன்,
சில சமயங்களில்
திக்கிக் கொள்கிறேன்,
என்னை அறியாமல் ஏதோ ஒரு
தீவில் நுழைகிறேன்,

மனதில் ஒரு ஓரத்தில் 
மர்மம் அவிழ்கிறேன்.,
பல காவியங்கள் கண்டும் 
திகட்ட மறுக்கிறேன்,
எனை மயக்கும் காவியங்களால்
தீயில் நனைகிறேன்,

எல்லை இல்லா நூல்களால் 
திசைகள் மறக்கிறேன்,
புதிய புத்தகம் ஏந்துகையில்
தினமும்  தொடர்கிறேன்,
தமிழ்  உருகிய வார்த்தைகளால் 
திண்டாடி நிற்கிறேன்.

–செந்தமிழ்சதீஷ்
கடலூர்

3