அவள் முகம் கண்டே

என் கண்கள் உயிர்பெறும்

இதமாய் இமை அசைத்தே

அவள் சுவாசிக்க மயிலறகாகும்

கரு விழியோ நெடுந்தூரம் பிரவேசிக்கும்

இரு இமைகளுக்கு இடையே அவள் இருப்பதை அறிய!

 

அவள் பிம்பம் கண்ட அச்சிறு நொடிகளுக்கு – இவை

இமைகளை வெறுத்து ஒதுக்கும்!

இதயத்தின் துடிப்பில் ஒரு ஆனந்தம்!

இதழை விட்டு வெளிவர மறுக்கும்

வார்த்தைகளுடன் ஒரு போராட்டம்!

அவள் இருக்கும் திசையை மட்டும்

பாதையாய் கருதும் என் விழிகள்!

என்னே ஒரு அருமை!

 

பூக்களின் மணமும் அழகும் அவள்

முகத்தை மட்டும் நினைவுப்படுத்தும்!

பட்டப் பகலிலும் வெய்யவனை எதிர்த்து

அம்மதியின் முகம் வெளிப்படும்!

எத்திசையிலும் அவள் இன்முகத் தெறிய

அவாக் கொண்டு இதயம் துடித்து போராடும்!

 

பயணங்களின் போது அவள் ஊர்ப் பெயர் மட்டும்

இனியாதாய் ஒலிக்கும்!

யாருமில்லா அந்தப் பயணியற் குடையில் – அவள்

நிழற் படாதா என்ற ஏக்கம் உச்சம் பெறும்

வாடிக் கொண்டே வதங்கியிம் விடும்!

 

இறையென்று இருந்தால் – என்

அவா ஒன்றை கேள்!

 

துளிர் முகமவள் என் விழிகளில்

தழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்!!!

27