களிறு கேட்கும்‌ கண்ணலும்‌,
உள்ளம்‌ கேட்கும்‌ கனியும்‌;
விழி தேடும்‌ ஒளியும்‌,

செவி தேடும்‌ இசையும்‌;

நா விரும்பும்‌ நல்விருந்தும்‌,
தளிர்‌ கரம்‌ கேட்கும்‌ நல்‌ உறவும்‌

இசையும்‌, சந்தமும்‌
எழுத்தும்‌,வடிவும்‌
சிந்தையும்‌, சொல்லும்‌
செயலும்‌, அதன்‌ வடிவும்‌

ஒளியும்‌ , ஒலியும்‌
பரிவும்‌, பிணைப்பும்‌

பல்பம்‌ வடிக்கும்‌ நல்லெழுத்தும்‌,
மழலை சிந்தும்‌ வாய்ப்பாட்டும்ம்‌

எம்‌

அகமும்‌, புறமும்‌
உள்ளும்‌,வெளியும்‌

உயிர்‌ சந்தம்‌ உம்‌ ஆகி
வான்‌ கடந்து வெளியிலும்‌
நறுமணம்‌ கமழும்‌

தமிழே

உயிர்‌ மொழியே
எக்காலம்‌ பிரியாது,
எல்லோ ரிடத்தும்‌
யாதுமாகி நின்றாய்‌ நீயே!

தமிழ் அமுது

இராமநாதபுரம்

7