காதலை கடிதங்களில் பகிர்ந்து கொண்டதுண்டா????

முன்னிரவு முழுதும்
அவன் மீதான காதலை மீட்கிறேன்
என் நினைவுகள் அவனை சுற்றி மட்டுமே
முட்டி தெறிக்கும் என் காதலை
வெளிப்படுத்த  அன்று என்னிடம்
கைபேசி இருந்திருக்கவில்லை
சட்டென்று எண்ணங்களை வடிக்க எண்ணி
வெள்ளை கடதாசியையும்
நிறப்பேனாக்களையும்……
என் அன்புக் காதலா…..
எனத் தொடங்கி உன் அன்பு மனைவி….
வரை பல பக்கங்களில்
கிறுக்கி தள்ளிய
காதல் கிறுக்கி நான்  ……
ஆங்காங்கே வண்ணப் பேனாக்களால்
வண்ணமயமாகியது என் காதல்….
ஆங்காங்கே வரையப்பட்ட இதயங்கள் கூட
எனையும் ஓர் ஓவியனாக்கியது…..
காதல் காவியத்தை எழுதி முடித்து விட்டு
உங்கள் பதிலுக்காய் காத்திருக்கிறேன்…
என முடித்துவிட்டு மடலை அழகாய் மூடி
என் புத்தகத்தினுள்  ஒழித்துக் கொண்டேன்…..
நாளை காலை அதனை உனதாக்கும் வரை
என் மனம் கனத்தது……
ஒருவாறு யாருமறியா வேளைதனில்
உனதாக்கிவிட்டு ஒரு பார்வை பார்த்திருப்பேன்….
உணர்ந்திருப்பான் அவன் ….
நான் பதிலுக்காய் ஏங்கியதை……
செக்கன்கள் நாட்களாகிய பின்
அவனிடமிருந்து மடல்…..
நான் எழுதிய ஒவ்வொரு வார்த்தைக்கும்
அழகாய் பதிலளித்தான்…
மீண்டும் மீண்டும் வாசித்து
மீட்டுகிறேன் என் காதலை……
என் பொக்கிசப் பெட்டகத்தில்
சேமித்து இன்றும் உன் நினைவை மீட்டுகின்றன ….
எத்தனை தொலைபேசிகள் வந்தாலும்
எவ்வளவு வேகமாய் காதலை பகிர்ந்து கொண்டாலும்….
காத்திருப்பும் காதலும் ஓர் சுகம் தான்…


துஷா P
இலங்கை

மே தின பறவை

மே தின பறவை ஒன்று வாழ்த்துச் சொல்ல துடிக்குது,
ரேகை தேய்ந்த கைகளோ துளி நேரமின்றி உழைக்குது!
நீ விழிக்கும் முன்னே செல்லும் கால்கள் சக்கரம்கட்டிக் கொள்ளுது,
நீ உறங்கிப்போன பின்னர் தான் வீடுவந்து சேருது!
பலமாத உழைப்பு உன் புத்தாடை ஆகுது,
தனக்கென்று எதுவும் வாங்க மனம் எங்கு வருகுது!
காசில்லா நேரத்திலும் உனக்கு கறிச்சோறு போடுது…
கடமையைச் சுமக்கும் உழைப்பின் கஷ்டம் யாருக்கிங்கே புரியுது?
ஒருநாள் மட்டும் வாழ்த்துச்சொல்லி மறைந்துபோகும் உலகிது…
உண்மையான உழைப்பிற்கு மகுடம் யார் தருவது ???


தீப்தி வேலாயுதம்
புதுக்கோட்டை

மடமைகள்‌ மாறுவதில்லை

விழிகள்‌ தோற்கும்‌ காரிருள்‌
மெல்லிசையாய்‌ கடிகார முள்‌

பின்னிட்டு ஓடும்‌ நினைவுக்‌ குதிரைகள்‌
மனத்திரையில்‌ மீண்டும்‌ உன்‌ முக

பாவனைகள்‌

ஏதேனும்‌ ஒரு நாள்‌ உன்‌ நினைவிலும்‌ நானும்‌
என நினைக்கையில்‌ சிரிக்கிறேன்‌

வயதுகள்‌ போனாலும்‌

மடமைகள்‌ மாறுவதில்லை

இளையராஜா
மதுரை

7