பாராதி நீ வா இனி
நாட்டிற்கே பெரும் நோய்ப்பிணி
அரசியல் எனும் பெருஞ்சனி
அதை அழிப்பதே உன் முதற்பணி
நிலமை கண்டு வருந்தாதே
நீயே அதற்கு மருந்தவாய்
சிலபேர் உண்டு உதவிடவே
பலபேர் உண்டு பகைத்திடவே
இளையோர் உண்டு இளைக்காதே
மலையைக் கூட தகர்த்திடுவோம்.
– சண்முக சுந்தரம்
புதுக்கோட்டை
திசையான கவிகள்
ஆயிரம் கவி பிறக்கட்டுமே மண்ணில்
ஆயிரம் ஏடுகள் குவியட்டுமே
கம்பனைப் போல் காவிய ரசமும்
கண்ணதாசனைப் போல் அனுபவ ரசமும்
பாரதியைப் போல் வீர பாடலும்
பாரதிதாசனைப் போல் பா இயற்றலும்
இந்நால்வரைப் போலினி காண்பது இயலுமோ
இதை எண்ணியெண்ணி நெஞ்சம் மீளுமோ
—கண்ணதாசனடிமை (ராஜேஷ்)
காஞ்சிபுரம்
அறிவும் அறியாமையும்
பொய்கள் இன்று சத்தியம் பேசுகின்றன
காலம் புன்னகைக்கிறது !
அறிவின் ஒளி உதிப்பதும் இல்லை
மறைவதும் இல்லை – அது
சலனமற்ற அமைதியாய் –
குகைக்குள் சுடர்விடும் விளக்காய் !
அறியாமைக் காற்று பலம்கொண்டு வீசுகிறது
அது அறிவின் ஒளியை மறைத்துவிட முடியாது
ஆனால்
குகையையே புழுதியால் மறைக்க இயலும் !
அறிவின் அளவோ அறியமுடியாதது !
அறியாமை அறியாததோ அளவிடமுடியாதது !
— Ameer Mohideen
TIRUNELVELI
உங்கள் கருத்தினை பதிவிடுக