தமிழ்
மூச்சாய் என்னுள்ளே நுழைந்து
பேச்சாய் என் நாவில் தவழ்ந்து
தேனாய் என் செவியில் பாய்ந்து
நிலவாய் என் கண் முன்னே தேய்ந்து
கயிறாய் என் உடலில் பிணைந்து
உயிராய் என்னுள்ளே வாழ்கிறாய்.
நீயே என் தாயாக
நீயே என் தந்தையாக
நீயே என் தமயனாக
நீயே என் தமக்கையாக
நீயே என் தோழானாக
நீயே என் காதலாக
நீயே என் தாராமாக
நீயே என் பேரனாக
நீயே என் வாழ்வாக
நீயே என் சாவாக
நீயே என் உயிலாக
நீயே என் உயிராக
என்றும் வரும் வரம் வேண்டும்.
தவமிருக்கிறேன் தமிழே…!!
–பாரதிகண்ணன்
புதுக்கோட்டை
வேண்டுவது எங்கிருக்கிறது ?
மகிழ்ச்சி நிறைந்த மனதில்
ஆனந்தம் எங்கிருக்கிறது?
வெற்றி அடைந்த இடத்தில்
நிறைவு எங்கிருக்கிறது?
கல்வி தேர்ந்த மையத்தில்
அறிவு எங்கிருக்கிறது?
காமம் நிறைந்த உள்ளத்தில்
காதல் எங்கிருக்கிறது?
ஒப்பந்தம் கொள்ளும் இடத்தில்
உறவு எங்கிருக்கிறது?
வேகம் தேடும் வியாபாரத்தில்
விவேகம் எங்கிருக்கிறது ?
ஆபாசம் அறிந்த நெஞசத்தில்
ஆசை எங்கிருக்கிறது?
நேசம் அறிந்த உள்ளத்தில்
மனிதம் எங்கிருக்கிறது?
இறைப்பற்று தேடும் கூட்டத்தில்
இறைஞனம் எங்கிரக்கிறது?
–நல்லதம்பி
காஞசிபுரம்
உங்கள் கருத்தினை பதிவிடுக