தினந்தினம் விழிக்கிறாள்
பல கனவுகளோடு

அவள் பயணம் தான் தொடருதே
ஆயிரம் தடைகளோடு

பெண்ணாக பிறந்ததே பாவம் என்ற எண்ணம் தான்
தினம் அவள் நெஞ்சோடு

பேருந்தில் பயணம் கூட போர்களமாக பல வார்த்தைகளின் வன்முறைகளை
தினம் கடந்திவள் போக

பணியிடம் தான் சென்றாலும் பாலியல் தொல்லை
சக நண்பனாக நினைத்தவனிடம் காதல் தொல்லை

காதலெனும் பெயராலும் கலங்கம் விதைக்கிறான்
அவள் கனவுகளை கண்ணீரால் சிதைத்து விடுகிறான்

காதலிக்க மறுத்தாலும் கொலை செய்கிறான்
மனதில் அச்சத்தை என்றும் நிலை நிறுத்துகிறான்

ஆசையிலே அசிங்கங்கள் நீ செய்கிறாய்

ஆடவரெனும் திமிர் உன்னுள் அதிகம் கொள்கிறாய்

எல்லை மீற நினைக்கும் ஆண் திமிரை தான் எரித்திடவே
தீப்பந்தம் எடுத்திட வேண்டும்

ஆண்மகனாய் பிறந்தமைக்கு அசிங்க படுகிறேன்
தினம் கற்பழிப்பு செய்திகளை கடக்கும் போதெல்லாம்
கடவுளான குழந்தையிடமும் காமம் தேடும் அரக்க ஆண்மகனின்
ஆண்மைதனை அறுத்திடல் வேண்டும்

மனதோரம் வருடியதை வரிகள் ஆக்கினேன்
மனமாற்றம் வேண்டும் என்று விரும்பி கேட்கிறேன்
தலை நிமிர்ந்து ஆண்மகனாய் தரணியில் வாழ
தலை வணங்கி நாமும் அவர்க்கு வழியினை விடுவோம்

– இரா. நரேந்திரன்

5