​என்னுடன் விளையாட வேண்டும் 

சிறு பிள்ளையாய் துரத்த வேண்டும் 

கைகளை கோர்த்து கொண்டு  

கீச்சிடும் குரலுடனே குயில்களை 

மிரட்டி ஓட  வேண்டும் 

கருத்த இரு விழிகளிலே கட்டெறும்பை 

நோட்டம் விட்டு வழி மறிக்க வேண்டும் 

பின் கடி பட்டு ஊர் பார்க்க அழ வேண்டும் 

வெண்பற்களை காட்டி சிரிக்கவும் வேண்டும் 

ருசி கொண்ட பண்டங்களை நாவூர பகிரவும் வேண்டும் 

பயந்தரு கதைச் சொல்லி கைப் பிடித்துறங்க வேண்டும் 

தாயே!  என் தங்கையாய்  நீ மறுபடி பிறக்க வேண்டும்  

நாம் குழந்தையாய் அகமகிழ வேண்டும் 

16