​பூக்கள் தேடும் புகலிடம் நீயோ

புன்னகையில் வருடும் மென்சிலிர்ப்பு நீயோ

நேர் நின்ற புற்களை வளைய விட்டு

அசைந்தோடும் நீரோட்டமோ – அதில்

எதிர்த் திசை தேடி குதித்து வரும் சிறு மீனோ

ஒற்றை காலில் நிற்பது நீயோ

ஓடைத் தோணியில் மிதந்து வருவதும் நீயோ

கற்றவன் எழுதிய கவியும் நீயோ

கற்பவன் பயிலும் கருத்தும் நீயோ
நீயோ நீயோ , என்னுள் நீயோ

என்னகம் நீயோ 

என் எண்ணமாய் நீயோ …!

0