வேண்டும் ஓர் பிறவி – மனிதனாய் 
ஆங்கே இறையும் மனிதமும் ஆட்சி புரிய அன்பானது மனதை ஆள வேண்டும் 
பணம் ஆங்கே பண்ட மாற்றுதலுக்கு மட்டுமேயன்றி பண்பை கெடுதலாய் வேண்டா
உறவுகள் சிறப்பிக்கவேயன்றி சிறுமைப் படுத்த வேண்டா

ஆசான் என்பவன் ஞானத்தின் உச்சமேயன்றி மோகத்தின் எச்சமாய் வேண்டா
பெண்மையாங்கே போற்றுதலுக்குரியதே யன்றி இச்சைக்கு மட்டு வேண்டா 

ஏழை செல்வந்தன் பேதமின்றி மனிதம் திகழ வேண்டும் 
ஆங்கே 
உயர் அன்பு மட்டு களவு போக வேண்டும் 
இயற்கை போற்று மாண்புடையவர்கள் வேண்டும் அதில் நான் சிறந்தவனாய் திகழ்ந்திடல் வேண்டும் 
வேண்டும் ஓர் பிறவி மனிதனாய்…

1