சாணி மெழுகிய தரை தான்…ஆனால்
டைல்ஸ்களை மிஞ்சிவிடும்…
தாயில்லா வீடு என்றால் சத்தியமாய்
நம்ப முடியாது..
அமுதா அக்கா விட்டில் அழகழகாய்
மூன்று அக்காக்கள்…
சேலையை கிழித்த தாவணியில்
அக்காக்கள் அனைவரும் அவ்வளவு அழகு..
பொருத்தமில்லா வண்ணத்தில் ஜாக்கெட் ஒரு நிறம்
தாவணி ஒரு நிறம்…
ஒட்டு போட்ட பாவாடையிலும் ஒற்றை முத்துமாலையிலும்
அவர்கள் இராஜகுமாரிகள்…
தூசி பார்க்க முடியாத ஒட்டூ வீடு..
முகம் பார்க்கலாம் அவர்கள் விளக்கி வைத்த
பாத்திரத்தில்…
சந்தையில் விலை போகாத கடைசி காய்கறியில் கூட
அவ்வளவு சுவையான சமையல்…
அக்கா அரைக்கும் மருதாணியில் அக்கம் பக்கம்
அத்தனை கைகளும் சிவக்கும்…
மார்கழி மாத கோலத்தில் போட்டி வைத்தால் நிச்சயம்
அக்காக்கள் தான் ஜெயித்திருப்பர்…
கார்த்திகை சஷ்டி பிரதோஷம் ஏகாதசி
அத்தனை விரதங்களும் அப்படி இருப்பார்கள்…
உதிரிப்பூக்களை விரல் கோர்க்கும் கலைக்கு
— ர.விசாலினி
தேவகோட்டை
உங்கள் கருத்தினை பதிவிடுக