தொண்டையில இறங்குது
தோத்துப்போய்
திரும்புது- என்
மண்டையெல்லாம் வலிக்குது
மகனே என்னாச்சி
உருண்டு படுத்தாலும்
தூங்கமாட்டியே
சுருண்டு படுத்தாயே
சோகம் தாங்கலா
ஆத்தா கண்ணுலா
ஈரம் கட்டுது
அப்பன் நெஞ்சிக்குள்ள
அணுகுண்டு வெடிக்குது
எங்கபோச்சி உஞ்சிரிப்பு
ஆடிப்போச்சி எந்துடிப்பு
சக்கரங்கட்டிய காலுக்கு
வேகத்தடை எங்கிருக்கு
உண்டது எதுவுமே
உனக்கு ஒத்துக்கிலா
உன்ன விட்டு உண்ணவே
நாங்க கத்துக்கிலா
என்னோட முதல் முத்தே
என்னோட முழு சொத்தே
என்னாட ஆச்சி
கண்ணோரம் கரையுதே
என்னோட மூச்சி
கொஞ்சம் இடத்திலா
கூடாரம் போல
சின்ன வயித்தில
தங்காதா சோறு
தாடி முடி குத்தவே
தாங்க மாட்டியே
ஊசிக் குத்துதே
எப்படி தாங்குவா
ஆத்தா வாந்தியெல்லாம்
உன்ன வளர்த்தது
உன்னோட வாந்தியெல்லாம்
ஆத்தாள கொல்லுது
ஆற்றிக் கொடுத்தாலும்
தேனீர் சூடுதான்
அம்மாவை
தேற்றிப்போனாலும்
உள்ளே பதறுவேன்
வயிற்றில் என்ன
போராட்டம்
வாழ்க்கையே
போராட்டம்தான்
என்னை பிடித்து
தூங்கும் மகனே
என்னை விட்டு
வளரவும் கற்றுக் கொள்வாய்…
— மோகன்
கிருஷ்ணகிரி
4
உங்கள் கருத்தினை பதிவிடுக