பார்பவையற்றை யெல்லாம்
எழுதிட வேண்டும் – அவை
பாவையின் முகமதி போல்
இருந்திடல் வேண்டும்
துயில் களைந்து எழுந்து
முகங்கழுவி தெளியுமுன் – அவள்
துஞ்சு முகம் நெளித்த சோம்பலை
எழுதிடல் வேண்டும்
இதழ் தந்த சொற்கள் யாவும்
அப்படியே வேண்டும் – எழுது கோலும்
நெளிந்து சிவக்கும் வண்ணம் அவை
இருந் தெய்திடல் வேண்டும்
மையிட்ட புருவத்தை எழுதுங்கால்
ஓரப் பார்வை வேண்டும் – வெட்கி
சுழலும் அம்மைவிழியை அதரத்தால்
தொட் டெய்திடல் வேண்டும்
அவள் அடி தொடும் மண் துகள்
சினுங்கிடு யோசை வேண்டும் – அது
மகிழ்ச்சியில் துள்ளி குதித்தோடும்
புழுதியாய் இருந் தெய்திடல் வேண்டும்
எழுதிட வேண்டும்
நறுமணமாக
ஒப்பில்லா சுவையாக
மனங்கிள்ளும் உணர்வாக
என்றும் எழுதிட வேண்டும்
22
உங்கள் கருத்தினை பதிவிடுக