சிட்டுக்குருவிச் சிறகுகளின்
சிலுசிலுப்பில்
பட்டுத் தெறிக்கும் நீர்த்துளிகள்
ஆவியாகிவிட்டது
ஆணுறுப்பு எரிமலையின்
தீப்பிழம்பில்

தேகத்தின் பசிக்கு
தேகமே இரையாகும் அந்த
இயற்கை விதியில் நிகழும்
பிழை மீண்டும் நிகழ்ந்திருக்கிறது

‘மோகப் பார்வையுடையோர் கண்டால்
தேகம் சிதைத்து விடு பாப்பா’
என்பது போல் கவிதை
நூறு கிடைக்கும் என்பதில்
மொழிக்கு மோகம்

மினுக்கான வார்த்தையோடுன்
தனக்கான பொலிவோடும்
நகைக்கிறது ஊடக மோகம்

எரிமலையின் சரித்திரம் தேடி
எங்கு எதைச் சொல்லி
குற்றம் சுமத்துவதான
சிந்தனையில் உலவகிறது
சுயநல மோகும்

இப்படி மோகங்கள் நிறைந்த
உலகில் தேகச் சிதைவுற்ற -அந்த
சிறு உடலுக்கு
மலர் வலையம் வைப்பதை
தவிர வேறென்ன
செய்ய இயலும்

இந்த கவிதையா சென்று
வடிகட்டிவிடபோகிறது
மோகக் காற்றை….

– நரேன் குமார்
வேலுர்

0