காற்றிலுன் சேலை அகப்பட்டதெனில்,
வீசுவதங்கு என் மூச்செனக்கொள்ளடி

நாற்றிலுன் கைத் தீண்டியதெனில்,
விளைவது அனைத்தும் நானெனக்கொள்ளடி

சேற்றிலுன் பாதம் பட்டதெனில்,
வளைந்தோடும் நதியாவும் நானெனக்கொள்ளடி

நேற்றிலுன் உறக்கம் விடுபட்டதெனில்,
வந்தநினைவுகள் யாவும் எனதெனக்கொள்ளடி

மாற்றுண்டு பசிப்பிணிக்கும் மருந்தெனில்,
உன்நினைவேயன்றி வேறேதடிக் கண்ணே!

— மணி

6