நிராகரிப்பு

பாலைவனத்திடை கரிந்த முள்
காலில் ஏறிட மனிதருமில்லை
கிரீடம் ஏறிட ஏசுமில்லை

– குமரன்

ஒரு பனிக்கால புலரி

கதவுகள் அனைத்தும்
அடைத்தும்
கள்ளத்தனம்
மாறாமல் இரவில்
நுழைந்தான்
வீட்டினுள்ளே
கள்வன் ஒருவன்

கம்பளிக்குள்
கால்களை சுருக்க வைத்து
நத்தையின் உணர்ச்சியை
உள்ளுணர்வில்
உண்டு செய்து

நத்தை கூட்டுக்குள்
ஓருடல் அல்ல
ஈருடல்களையும் கம்பளி ஓட்டுக்குள்
கடத்தி விட்டு

தூக்கமின்றி விழிக்கும்
விழிகளுக்கு
உறங்க
கொஞ்சம் மயக்கம் தந்து
கனவுலகின் காலநீட்டிப்புக்கு
ஓர் மர்ம உத்தரவை பிறப்பித்து
வெளியில் வந்தான்

முடிந்தவரை மாற்றிவிட வேண்டும்
இவ் இரவையாவது
மனிதனுக்கு அறியாமல் என்று

சுற்றி எங்கும் பார்த்த நேரம்
தரைகளின் மேல் எங்கும்
பாரம்
வீடுகளாய்

ஒரு பொதுவுடமை தத்துவமாய்

புற்களின் தலைகளுக்கம்
சுமைகளை ஏற்றி

ஊசி முனைகளில்
நீர்களை நிறுத்தும்
வித்தைகளை எல்லாம்
செய்துகொண்டிருந்த நேரம்

கிழக்கிலிருந்து
உடல் சிவக்க எழுந்து வந்தான்
ஓர்
பழைய கிழவன்..

மாற்றிய நிகழ்வனைத்தையும் கண்டு
கண்களெல்லாம் கனலாய்
கனத்து
பனியின் உயிரை
பறித்தான்
புலர்ந்தது பொழுது
முடிந்தது பனிஇரவெனும்
அரைநாள் ஈசலின்
ஆயுளாய்

எழுந்தான் மனிதன்
ஏதும் மாறவில்லை
இயல்பாய் இருக்க

சன்னல் திறந்தான்
ஒளிகள் கூச
கண்களை துடைத்து
கைதொழுதான்
சூரியனை

ஏதோ புதிதாய் ஒன்றை
சாதித்ததாய்
உச்சி நோக்கி
நகர்ந்து கொண்டுருந்தான்
அந்த சிவந்த கிழவன்

– மணிவண்ணன் மா

கடலூர்

சிரிக்கின்றாள்
—————————-

மென்குளி ரடர்ந்த மேகங் கலைவதும்
பெண்னிவ ளின்பத் இதழ்க ளகழ்வதும்;
திங்கற் கதிர்கள் திரைக்கடந் தொளிர்வதும்
கங்கிவள் பற்கள் கதிரொளி காட்டுதும்;
தாமரை பூக்கள் தலைநிமிர்ந் தாடுதும்
பூமுலை குன்றுகள் பொங்கி எழும்புதும்;
காலை விடியுங் கலையைக் காண்பதும்
சோலைக் குமரிச் சிரிப்பைக் காண்பதும்;
காளை மனதிற் கொண்ரே!!!

– பிரபாகரன்

தஞ்சாவூர்

7