இப்பொழுதும்
ஞாபகம் இருக்கிறது
அந்த மழைநாளை.,..
கலர் கலர் பட்டாம்பூச்சிகள்
வந்து அமரும்
மார்கழி மாத
தும்பைச்செடி போல்
மாறி விடுகிறது
அந்த மழைநாள் பள்ளிக்கூடம்…. மேகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை போல
புகைந்து கொண்டிருக்கும் சத்துணவு கூடம்…
கடைசி பெஞ்சில்
காலியாகி கொண்டிருக்கும் தயிர்சாதமும்,உருளைக்கிழங்கு வறுவலும்….
மழையில் நனைந்தபடி
அவளின்
திடீர் வருகையும்,
அவள் தலையில் வைத்திருக்கும்
டிசம்பர் பூக்களும்…

-துரைசந்தோஷ்
புதுக்கோட்டை

இருக்கும் நிலையதிலே
செருக்கும் அடைந்திடவே
இருந்திட்ட நிலையதுவே
மறந்திட்டு கடந்திடவே
வருந்தும் நாளதுவும்
விருந்தாய் விரைந்திடவே
இருக்கும் நிலையதிலே
இறப்பும் நிலையதுவே !!!!

– பிரவின்
சென்னை

13