உச்சி வெயிலில்
பச்சியின் நிழலும்
நிரந்தரம் அல்ல…….

பணத்தின் மதிப்பிழந்த
பிணத்தின் ஊனும்
நிரந்தரம் அல்ல…….

நாளைய பிணம் என்றபோதும்,
இன்றைய மனம் ஒருபோதும்,
நிரந்தரம் அல்ல…..

முன் போற்றுதலும்,
பின் தூற்றுதலும்,
நிரந்தரம் அல்ல…….

தேக்கி வைத்த காமமழையும்,
பாக்கி வைக்காத முத்தத்துளியும்,
நிரந்தரம் அல்ல…….

நேசிக்கும் முன் யோசிப்பதும்,
யோசித்த பின் நேசிப்பதும்,
நிரந்தரம் அல்ல……!

கருவறையில் உயிர்
பிறக்கும் தருணமும்,
கல்லறையில் உயிர்
துறக்கும் மரணமும்,
நிரந்தரம் அல்ல……!

உன் நினைவில் நிற்கும்,
என் கவியின் வரிகளும்,
நிரந்தரம் அல்ல……!
கடைசி வரி வரை இந்த
கவியை நீ படிக்க எந்த
வித உத்திரவாதமும் அல்ல……!
உத்திர்வாதங்களும் நிரந்தரம் அல்ல…..!

 

– ஜெ.லினே அஜய்

சென்னை

8