எந்த மீனின்
ஆயுளின் முடிவு காலம்
இன்றோ என்று
தலைகீழ் கேள்விக்குறியாய்
தூண்டில் முள்
தக்கைகளாய்
மேல் நின்று கவனிக்கிறார்கள்
தகுந்த நேரத்தில்
காட்டிக்கொடுப்பதற்கு
எத்தனை முறை வேண்டாமென்று
தலை அசைக்கிறது தக்கை
மீன்களின் வன்புணர்வு
கொக்கிகள் மாட்டப்பட்டு
கழுவேற்றம் தண்டனையாய்
ஒற்றை உணவுக்காய்
இருகொலைகள்
இரைக்காய் புழு
இரையாய் மீன்
நியாயமற்ற வேட்டை இது
– மணிவண்ணண் மாசிலாமணி
கடலூர்
January 25, 2020 at 1:06 pm
அருமை அருமையான கவிதை….