அற்பமே பேரழகாய் நீதிரிந்து மெய்மயக்கி வாழ்வழிப்பாய்
சொற்பமே உன்நோக்கங் கண்டறிவார் இந்தப் புவிமேலே
எற்பமே நீயிருக்க உன்னொளி வாங்கி யுயிர்பிழைக்கும்
சொற்கடல் மாமதி யென்றுரை யும்மை விரும்பேனே!
— பொன்.ஜெயவிஜயன்
திருவண்ணாமலை
#நேசம்
உனக்கும் எனக்குமான நேசமென்பது,
பெருவெளிகள் கடந்த நிசப்தம்!
செயலூக்க காட்சி தாகங்களின் ஆதிக்கங்கள்!
ஆன்மா இசைக்கும் கருவி!
எத்தனிக்கும் நினைவுகளின் சாட்சி மிகைகள்!
விண்ணை இடம்பெயர்த்தும் பெரும் மலைகள்!
உணர்வுகள் சூடேறும் தனிமையின் ஆழம்!
நிச்சலனம் சிறு அமைதி பழகிவிட்ட கணம்!
போர்முரசு பெரும்ஒலியின் சிறுதுணிவு!
காத்திருந்த அன்பின் பெரும் வசவு!
குழந்தை குதூகலிக்கும் இனிப்பு துண்டங்கள்!
எல்லா திசையிலும் அதிசயம் நிகழ்த்தும் மாயவித்தை!
கரும்வானத்தின் பெரும் மழையின் சிறுதூறல்!
சேற்று செந்தாமரையின் அன்றலர்ந்த வனப்பு!
— ஆனந்தி ராமகிருஷ்ணன்
கடலூர்
உங்கள் கருத்தினை பதிவிடுக