ஒரு ரொட்டி பாக்கெட் எடுத்ததற்கு
சூடு பெற்றபோது
அவன் சிறிதும் கத்தவில்லை
அம்மாவை அழைக்கவில்லை
இனி செய்யமாட்டேனென கெஞ்சவில்லை..
வலியின் அறிகுறி அவன் முகத்தில் தெரியவில்லை..
கொஞ்சதூரம் சென்றபின் சூடு வைக்கப்பட்ட இடத்தை தொட்டுப் பார்த்துக்கொண்டான்
பசித்த வயிற்றின் வெப்பத்தைப் போல அது அவ்வளவாக சுடவில்லை.
– ந.சிவநேசன்
சேலம்
January 25, 2020 at 12:10 pm
ஒரு பசித்த வயிற்று ஜீவனின் நிலை உணர நமக்கு மனமிருக்கிறதா என்ற கேள்வியை வீசுகிறீர்கள் திரு. சிவநேசன். வாழ்வில் வறுமை என்ற கடும் ஆசானின் பாடம், அந்த ரொட்டியை நான் கொடுத்திருக்கலாமோ என்றெண்ண வைக்கிறது. அல்லவே…சுடாத வயிற்றுக்கான சூழல் அல்லவா என் பொறுப்பு. பொறுப்பை நிறைவேற்றும் நாளில் மீண்டும் மின்னஞ்சலில் பேசுகிறேன்.