உதிரத்தால் எனை உயிர்த்தவளே
இடை பெருகி உருக எனை இழைத்தவளே

மூப்பில்லையடி தாயே உன் இளமுகம்
முதிர் என் கண்களுக்கு

என் முதலகத்தை இன்றும் நீ வைத்திருக்கிறாய்
அதை தொழுது வணங்கிட வேண்டுமடி – அந்நருள் புரிவாயடி எனக்கு

தூக்கமின்றி நான் புரளும் போதெல்லாம் உன் கை விரல்கள் என் தலை முடியை கோதுமடி
அப்படியே உன் தோள் மீது தலை வைத்து உறங்கி தான் போவேனடி

சிறுகதை சொல்லி நீயும் நன்மை யாவதும் தான் உறைப்பாய் – அதன் சூட்சுமங்கள் யாவும் இன்று
எனை சான்றோன் என அழைக்குதடி

தமிழன்னை உண்டென்றாய் அவளே நம் மூத்தாளென்றாய் – அவள் தொண்டு செய்து கிடந்திடவே நம் கடனென்று உணர்த்திட்டாய்
அ வென எழுத வைத்தாய் அஃது இன்று அகிலத்தை எழுத துடிக்கிறதடி

உன்னைத் தான் எழுதிட்டே எழுத்தின் ஓம்காரம் தொடங்குகிறேன் – என்றும்
அகங்காரம் இல்லாமல் என் பணி செய்வேனடி

என் தாயே,

உயிரோடு பிணைந்திருக்கும் இந்நுடல் மண்ணை நாடும் வரை
உன் பிண்டத்தின் பாகமாய் தான் இருந்து மறைவேனடி

11