நல்லதே நடந்திட வேண்டுமென்று நல்லெண்ணம் கொள்வார் 

நல்லவார் இல்லையென்றே பெரு ஏக்கம் கொள்வார் 

இது செய்த்திருத்தல் வேண்டும் அது செய்த்திருத்தல் வேண்டும் என ஓர் பட்டியலும் வைத்திருப்பார் – அஃது நடத்திச் செல்ல இவரே பல யுக்திகளை சொல்வார் 

உழைப்பவன் நானென்றும் என் கடமை குடும்பத்தை காப்பதே எனவும்  

பெரும் அமைதியை கடைப் பிடிப்பார் 

எல்லோரும் அவரவர் கடமையை செய்திட வேண்டுமன்றோ என வாயார கேட்டிடவும் செய்வார் 

மக்களால் மக்களுக்காக எனப் பாடத்தை ஒப்புவிப்பார் 

தேர்ந்தெடுக்க நற்தலைவன் இல்லை எனவும் ஒத்துக் கொள்வார் 

நல்லதை காண்கையில் ஆனந்த கண்ணீரும் –  தீயதை காண்கையில் எதுக்கும் உதவாதொரு கண் சிவந்திடும் கோபத்தையும் சொறிந்திடுவார் 

இவர் நல்லவர் தான் 

யார் வந்து கொடுத்தாலும் வாங்கி கொண்டு சொல்வார் 

எனது வாக்கு உங்களுக்கே! 

3